உயர்குறுக்கீடுகள்

in கவிதை

ஊர் வம்பு
குடும்ப வம்பு
வீட்டு வம்பு
செய்யும் அழைப்பு
பெறும் அழைப்பு
கடன் அழைப்பு
குறுஞ்செய்தி
மின்னஞ்சல்
அக்கப்போர்
விளக்கமளிப்பு
சமாதானப்படுத்தல்
சந்தேக நிவர்த்தி
சமாளிப்பு
தற்காப்பு
விருந்தோம்பல்
கடைக்குப் போதல்
விசில் எண்ணுதல்
மோட்டர் போடுதல்
அட்டை போடுதல்
ஆளில்லா அறையில் விளக்கு, விசிறி அணைத்தல்
காலிங் பெல் ஒலிக்கு உடன் எதிர்வினையாற்றல்
பிஸ்கட் கலர் பையை சட்டென எடுத்துத் தருதல்
சரியாய் கவனிக்கா தகவல் பகிர்விற்கு முறுவலித்தல்
இன்னொரு கவிதை தோன்றக் குறிப்பெழுதிவைத்தல்

கவிதை எழுதும்போது நேரும்
குறுக்கீடுகளைக் கொண்டு ஒரு
பட்டியல் கவிதையே எழுதிவிடலாம்
இந்த மாதிரி.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar