சாயல்

in ஓவியம், கவிதை

பழைய காதலி சாயலில் யாரோ
ஒருத்தியைத் தெருவில் பார்த்தேன்
பம்மிப் பதுங்கி அவளைக் கடந்து
பாதுகாப்பான இடத்திலிருந்து
திரும்பிப் பார்த்தேன்
அவளேதான் யாரைப் போலவோ
ஆகிவிட்டிருந்தாள்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar