பேயோன்

படித்ததில் பிடித்தவன்

எனது சிரிப்பு

November 26th, 2011

காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன்
நிஜம் போலவே கவிழ்ந்தும் கைகொட்டியும் சிரிக்கிறேன்
சிறிது நேரம் எல்லோருக்கும் சூட்டிகையாக இருந்தது
ஆனால் நிற்காத என் சிரிப்பு எரிச்சலைக் கிளப்பியது
முதுகில் ஒன்று போடச் சொல்கிறாள் அம்மா
பொம்மைகளைப் பிடுங்கிவிடுவேன் என்கிறான் அப்பா
திட்டாதே பாவம் என்கிறாள் பாட்டி
மிரட்டல், வசவு, கெஞ்சல் எல்லாம் சிரிப்புக்குத் தீனியாகிறது
நான்தான் இப்போதைக்கு சிரிப்பை நிறுத்துவதாக இல்லை.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar