நீ

in கவிதை

நீள்கிருதா டிரிம் செய்து
அடிடாஸ் வாடை தெளித்து
லூயி பிலிப் சட்டையணிந்து
பாக்கெட்டில் சன்கிளாஸ் செருகி
பழுப்புநிற கார்கோஸ் அணிந்து
கட்ஷூவில் காலைக் கொடுத்து
பஜாஜ் பல்சரில் புட்டமழுத்தி
சிறுமகனைத் தொப்பை மேல் சாய்த்து
பெட்ரோல் டாங்க் மீதமர்த்தி
கூட்டம் கருதாமல் உறுமி விரையும்
முப்பது வயது இளைஞனே,
அவனையும் உன்னை மாதிரி
ஆக்கிவிடப் போகிறாய்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar