எதிர்கொள்ளல்

in கவிதை

கல்லூரியில் எங்கள் நண்பர்களில் ஒருவன்
மிகவும் குண்டாக இருப்பான்
அதற்காக நாங்கள் அவனைக் கேலி செய்வோம்
“நீ நிற்க இங்கே இடமில்லை,
பேசாமல் பீச்சுக்குப் போய்விடு” என்போம்
பத்தாண்டுகள் சில கடந்து
அவனை நேற்று ஓரிடம் பார்த்தேன்
காலம் அவனை இளைத்துவிட்டிருந்தது
என்னைப் பெருத்துவிட்டது போல.
விடைபெறும் ஆவலில் அவசர குசலம் பேசி
பிரிந்து சென்றோம் அவரவர் விதிகளுக்கு.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar