மின்வெட்டு மதியம்

in கவிதை

மின்சாரம் இல்லை
தொங்குசிலையாய்
மின்விசிறி சமைந்திருக்கிறது
அதன் சுற்றியக்கத்துச் சூடு
நீடிக்கிறது வெக்கையால்
அரையிருட்டில் தெரிகிறது
வீட்டின் திடீர் சோபையிழப்பு
ரெம்பிராண்ட் பார்த்தால்
தூரிகையைக் கையிலெடுத்து
வியர்வையில் தோய்க்கக்கூடும்
மின்விசிறியின் மௌனத்தால்
சர்வ சத்தங்களும் நிர்வாணமாகி
தனித்தனியே ஒலிக்கின்றன
பால்கனி வழியே
தெருமுனை மின்பெட்டியில்
பழுது வேலை நடக்கிறது
கவலையே படாமல்
தெருவில் குழந்தைகளின்
உரத்த விளையாட்டு
மின்வெட்டு பெரியவர்கள் சமாச்சாரம்

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar