குழந்தைகளின் சுயநலம்

in கவிதை

குழந்தைகளின் சுயநலத்தில்
உள்ள நேர்மை நெகிழ்ச்சியளிப்பது
உனக்காகத்தான் செய்கிறேன்
என்ற பாசாங்கு அவர்களிடம் இல்லை
நியாயத்தின் எளிய தர்க்கம்
பிடிபடாமல் அவர்கள் திணறுவது
நெஞ்சைத் தொடும் அழகு
அதனால்தான் குழந்தைகளை ரசிக்கிறேன்
அதனால்தான் அவர்களை வெறுக்கிறேனும்கூட

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar