உயர்பிறையே விரைந்தெனை அண்மி

in கவிதை

(குழந்தைகளுக்கான பாடல்)

உயர்பிறையே விரைந்தெனை அண்மி
நிற்றல் தவிர்த்து விரைந்தெனை அண்மி
இயற்கை எழுப்பிய பிரமிடு தன்னை
இவர்ந்தும்கூட எனை நீ அண்மி
மலர் மல்லிதனை நீயெனக்குக் கொண்டாந்திடு
வானளாவும் காகிதச் சதுரம் – அதைப்
போன்மித்து நீ எனை நோக்கிப் பறந்திடு
ஆட்டக்காரக் கிழங்குப் பொம்மை – அதைப்
போன்மித்து நீ எனைச் சுழன்று வந்திடு.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar