குழந்தைகளை கடைக்கு அனுப்பினால்

in கவிதை

குழந்தைகளை கடைக்கு அனுப்பினால்
மிச்சக் காசு வருவதில்லை
நாம் போய்க் கேட்டால்
கடைக்காரர் எடுத்துவைத்ததை
பத்திரமாகக் கொடுக்கிறார்
நமக்கு அலைச்சல் மிச்சமாகும் என
குழந்தைகளை அனுப்பப்போய்
தாமும் அலைந்து நம்மையும்
அலையவைக்கின்றன குழந்தைகள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar