நீ என்னோடு வந்துவிடு

in கவிதை

ஸ்பானிய மூலம்: லியோபோல்டு ஜோரோஸ் (1921-1966)
தமிழாக்கம்: பேயோன்

ஏனெனில்
வசந்தத்தின் ஐரிஸ் மலர் போல்
நீ அழகாக இருக்கிறாய்

நான் அறியேன்
நீ யார், உன் பெயரென்ன,
நீ செய்வதென்ன என்பதை
ஆனால்

உனக்கொன்றை
நான் கூறுவேன் –
நீ என்னோடு வந்துவிடு

நான் அறியேன்
நீ என்னை விரும்புகிறாயா,
உனக்கு சாப்பிட எது பிடிக்கும் என்பதை
ஆனால்

உனக்கொன்றை
நான் கூறுவேன் –
நீ என்னோடு வந்துவிடு

ஏனெனில்
வசந்தத்தின் ஐரிஸ் மலர் போல்
நீ அழகாக இருக்கிறாய்
இல்லை என்றால்
நான் ஏன் உன்னைக் கூப்பிடப்போகிறேன்?

Tags: , , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar