துணுக்குலகம்

in கவிதை

ஒரு மழை ஒற்றைப் பெருந்துளியாகப்
பெய்வதில் என்ன இருக்கிறது?
ஒரு மரம் ஒற்றைப் பேரிலையை மட்டும்
கொண்டிருப்பதில் என்ன இருக்கிறது?
மனித இனம் ஒற்றைப் பெருமனிதனாய்
நடமாடுவதில் என்ன இருக்கிறது?
சுவாரசியமாக இருக்கட்டும் வாழ்க்கை.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar