உடன்படிப்பு

in கவிதை

என்னோடு படித்தவர்களுக்கெல்லாம்
திருமணமாகிவிட்டது
‘உனக்கு மட்டும் ஆகவில்லையா?’ என்றால்
எனக்கும் ஆகிவிட்டது. ஆனால்
நான் என்னோடு படிக்கவில்லை
அவர்கள்தான் என்னோடு படித்தார்கள்
நான் அவர்களோடு படித்த மாதிரி.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar