துன்பத்தின் பிம்பம்

in கவிதை

துன்பமே, உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்த்ததுண்டா?
பார்த்தால் சிரித்துவிடுவாய்.
உன்னைப் பற்றிய
உன் மிதப்பு மூழ்கிவிடும்
உனக்கே துன்பம் ஏற்படும்.
அந்த இன்னொரு துன்பமே,
உன் முகத்தைக்
கண்ணாடியில் பார்த்ததுண்டா?
பார்த்தால் சிரித்துவிடுவாய்…

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar