ஆட்டோஎராட்டிசிச தனிமை இயற்கை ரசிப்பு சமஸ்கிருதக் கலப்பு கவிதை

in கவிதை

நிசப்தப் போக்கில் நதி ஓடுகிறது
வனம் சலனிக்கிறது காற்றில்
தோட்டத்தில் பூக்களின் ரீங்காரம்
சமுத்திரம் அலைகளைத் தள்ளுகிறது
பறவைகள் வானூடே பறக்கின்றன
நதியில் மூழ்குகிறேன்
வனத்தில் அலைகிறேன்
பூக்களை முகர்கிறேன்
அலைகளில் கால் நனைக்கிறேன்
பறவைகளை அண்ணார்கிறேன்
ஏகாந்தத்தில் எல்லாம் சுகமாயிருக்கிறது
அதை இங்கே பதிவுசெய்கிறேன்.

Tags: , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar