உதிர்ந்த காதல்

in கவிதை

ஸ்பானிய மூலம்: லியோபோல்டு ஜோரோஸ் (1921-1966)
தமிழாக்கம்: பேயோன்

நாம் உயிரோடுயிரென காதலித்தோம்
நமக்குத் தேவைப்பட்ட அது,
நமக்கு மிகவும் பிடிக்கவும் செய்தது
நாம் காதலித்தோம், வேறு எவரையும் போல
நமக்கு முந்தையவர்களைப் போல்
காதலை நாம் மரணமற்றதாக்கவில்லை
அது முன்பே அப்படித்தான் இருந்தது
பிறகு பனிக்காலம் வந்தது
இலையுதிர்காலத்தின் கடைசி இலையாய்
உதிர்ந்தது நம் காதலும்.
எப்படியென்று நினைவிருக்கிறதா?
காதலின் கால்களைக் கரிய நினைவுகளால்
நான் கட்டினேன். மற்றும் நீ –
நீ சொற்களின் வளைவுகளால்
கைகளை இறுக்கிக் கட்டினாய்
டெய்சிப் பூக்களை அதன்
வாயில் அடைத்தாய்
கால்களை நானும் கைகளை நீயுமாய்
கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு
மாற்ற மீன்களுக்கு வலைவிரிக்கும்
மீனவர்களாய், காதல்கள் சுவடின்றிக் கரையும்
இருட்பெருங்குழியில் நம்முடையதை வீசினோம்
நினைவுகளை எறிந்து நிம்மதியடைந்தோம்
நினைவின் பிரதிகளை என்ன செய்ய?

Tags: , , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar