வாசக வாழ்த்து

in கவிதை

(வாசகர் வன்மதி எனக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை)

ஆகஸ்டு 7இல் பிறந்தானே
மெல்லக் கனவாய் வளர்ந்தானே
பள்ளி, கல்லூரி பயின்றானே
புத்தகம் பலதைப் படித்தானே
தானும் எழுத வந்தானே
காதலைக் கொஞ்சம் இத்தானே
அதைத் திருமணமாக்கி முடித்தானே
ஆண்மக வொன்றினைப் பெற்றானே
நூல்கள் பலவினைக் கண்டானே
செலவுகள் பலதமைச் செய்திட்டே
விருதுகள் கலகலெனக் குவித்தானே
எந்தையும் யாயும் மகிழ்ந்து குலவிய
தொன்றுதொட்ட சூழலிதில்
இன்னும் எத்தனை செய்வானோ
பார்க்க நானும் இருப்பேனோ.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar