கற்பனை சஞ்சாரிணிக்கு

in கவிதை, மொழியாக்கம்

ஸ்பானிய மூலம்: லியோபோல்டு ஜோரோஸ்
ஆங்கிலம் வழியே: பேயோன்

உன்னைப் பிரிந்து எவ்வளவு வாடுகிறேன்!
ஒருபோதும் உனக்குத் தெரியப்போவதில்லை

நான் உன்னைப் பிரிந்து வாடுகிறேன் –
நீ என்னை இரக்கமின்றி விட்டுச் சென்ற
ஒரு நிஜ நபரைப் போல.

நீ உனது அருவிகள், ஓடைகள்,
இயற்கையின் அளவிற்கு முதிய காட்டுநதிகள்,,
பனிப் பாதைகள், பளிர்நீலக் கடற்கரைகள்,
மலைகளை மறைக்கும் புராதன மரங்கள்,
பறவைகள், மற்றும் பூக்களுடன்
உன்னுலகில் எங்கும் நிரவியிருக்க,

நீயற்ற இந்த எனக்கல்லாத உலகில்
நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar