கருணைக் கொலை

in கட்டுரை

எழுத்தாளனாக ஊரைச் சுற்றும்போது பல பேரின் சகவாசம் கிடைக்கிறது. சமீபத்தில் அப்படிக் கிடைத்த நண்பர் ஒருவர் அஜ்மல் கசாபுக்குக் கிடைத்த மரண தண்டனை பற்றி பயங்கர குஷி தெரிவித்தார். இந்த அன்பர் சுமார் 40 கொலைகள் செய்து இன்னும் பிடிபடாமல் இருப்பவர். என்றைக்காவது மாட்டுவோம் என்ற பயத்தில் வாழ்ந்துவருகிறார். இத்தனை கொலைகள் செய்திருப்பதால் சாகும் வரை சிறைவாசம் போல் கொடூரமான தண்டனை ஏதாவது கொடுத்துவிடுவார்களோ என்ற பீதியில் இருந்தார் (“பண்ணது 40 கொலைன்னாலும் ஜெயில்ல சாவற வரைக்கும் அவஸ்தைப்படுறது நாமதானே சார்?”). கசாப் தீர்ப்பால் இப்போது இவருக்குள் நம்பிக்கை பிறந்திருக்கிறது. மரண தண்டனை என்றால் தூக்கில் போடும் வரை சில கால இம்சைதானாம். சாகும் வரை சிறைதான் உண்மையான மரண வேதனையாம். “மரண தண்டனையோடு விட்டுவிடுவார்கள்தானே?” என்று அடிக்கடி போன் செய்து கேட்கிறார்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar