புதிய கவிதைத் தொகுப்பு

in கவிதை

எனது ஐந்தாவது நூலும் இரண்டாம் கவிதைத் தொகுப்பும் முதல் மின்னூலுமான ‘நள்ளிரவும் கடலும் நானும்’ இன்று ஆரவாரமின்றி எனது வலைத்தளத்தில் வெளியானது. எனது நண்பரான மொழிபெயர்ப்பாளர், கவிஞர் லார்டு லபக்குதாஸ் தொகுப்புக்கு முன்னுரை தர இசைந்திருக்கிறார். அத்துடன் அதைத் தரவும் செய்து புத்தகத்தில் வெளியாகியும் உள்ளது. இந்த மின்பதிப்பைத் தற்போதைக்கு இலவசமாகத் தரவிறக்கலாம். epub வடிவில் உள்ள இந்த நூலை ஐபோன், ஆண்ட்ராய்டு செல்பேசிகளிலும் ஐபேட் மற்றும் பிற கையேந்திக் கணினிகளிலும் (tablet PCs) வாசிக்கலாம். ஃபயர்ஃபாக்ஸ், கூகுள் க்ரோம் உலாவிகளிலும் வாசிக்க முடியும்.

கண்முன் விரிய தொகுப்பிலிருந்து சில காட்சிகள்…

 

நண்பர் விஜய் சதாசிவம் அனுப்பிக் கொடுத்த ஐபேட் திரைப்படம்…

தரவு இறப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்: epub அல்லது zip அல்லது pdf

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar