சட்டைப்பை

in சிறுகதை, புனைவு

“அப்ப வரட்டுங்களா?” என்று எழுந்தான். அவர் அதற்கு பதிலளிக்காமல், “இந்தா, செலவுக்கு வச்சுக்க” என்று உரிமையோடு அவன் கையில் ஒரு கொத்து வெற்றிலையைத் திணித்தார். “அடடே, எதுக்குங்க இதெல்லாம்” என்று பதறித் திரும்பத் தர முயன்றான். “அட இருக்கட்டும்பா” என்று மீண்டும் அவன் கையில் திணித்தார். “நன்றிங்க” என்று வெற்றிலையை எண்ணிப் பார்த்துக்கொண்டான். பிறகு “இவ்வளவு வேணாம்ங்க” என்று பாதியைத் திரும்பக் கொடுத்தான். அவருக்குக் கோபமே வந்துவிட்டது. “இப்ப நீ இத சட்டப்பைல வெக்கிறியா இல்லியா?” என்று அதட்டினார். அவன் இளித்துக்கொண்டே பேசாமல் சட்டைப்பையில் வைத்துக்கொண்டான். “பத்திரம்” என்றார்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar