ஐந்து காதல் கவிதைகள்

in கவிதை

அரைநொடிப் பார்வையை
என் மேல் வீசும்போது
எவ்வளவு அழகாயிருக்கிறாய்!
என்னையே பார்த்துக்கொண்டிருந்தால்
இன்னும் எவ்வளவு அழகாயிருப்பாய்!

*

பூச்சூடுதூரத்தில்
இல்லை நான்.
என்னறையில் பிரேமிட்ட
உன் புகைப்படத்திற்குப்
போடுகிறேன் மாலை.

*

படித்துறையில் அமர்ந்து
சலனமற்ற குளத்துநீரில்
ஆழ்ந்திருக்கையில்
வரும் நீ
ஒரு கல்லை எறிந்து
விட்டுப் போகிறாய்
உன் கைபட்ட கல்லின் எச்சில்
என் மேல் தெறிக்க.

*

நீ விளக்கை ஏற்றினாய்
திரி தீப்பிடித்துக்கொண்டது.

*

பேருந்து நெரிசலில்
இடமின்றி என் மடியில்
நீ வெட்கமாய் அமர்ந்த
கணங்கள்… குறிப்பிடத்தக்கது!

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar