உன் செட்டு

in கவிதை

அடுத்தடுத்த விபத்துகளில்
தாய்-தந்தை
போய்ச் சேர்ந்தார்கள்
ஆதரவான ஓரிருவர்
இன்னொன்றில் செத்தார்கள்
எல்லோருக்கும்
வருடாவருடம்
ஈமச்சடங்கு செய்யும்
படித்த எருமை
மெச்சிக்கொள்கிறது
ஒருகுறையும் வைக்காமல்
சடங்குகளைச் செய்ய
ஆண்டவன்தான்
தயவுசெய்தானாம்.
உன் செட்டு!

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar