#மகாபாரதி

in கவிதை

அவர் இறந்துவிட்டார் என்பதற்காக சொல்லவில்லை, ஆனால் பாரதியார் நிஜமாகவே நல்ல எழுத்தாளர்.

— பேயோன் (@ThePayon) February 12, 2012

பாரதியார்: காலா… என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்.
காலன்: அஸ்கு புஸ்கு.
பாரதியார்: :-((((((((((((((

— பேயோன் ᵒᶠᶠˡᶦⁿᵉ (@ThePayon) September 11, 2014

பாரதியாரே, பிறர் வாடப் பல செயல்கள் செய்வதில் என்ன வேடிக்கை?

— பேயோன் (@ThePayon) August 22, 2011

பாரதி போய்விட்டான். “காலருகே வாடா” மட்டும் காலனை மிதித்துக்கொண்டிருக்கிறது நிரந்தரமாய்.

— பேயோன் (@ThePayon) November 24, 2011

‘புரிகிற பாரதி’ என்ற என் ட்விட்லாங்கருக்கு உசாத்துணை விட்டுப்போனது. இதில் ‘முகப்பு’ என்பதை க்ளிக் செய்க. http://t.co/KGgJrGBKhX

— பேயோன் (@ThePayon) March 30, 2015

புரிகிற பாரதி

Read: http://t.co/GT9rlmSEV0

— பேயோன் (@ThePayon) March 28, 2015

காத்திருந்தால் வருவேன் நள்ளிராவிலே பாங்கியோடென்று சொன்னாய் / வார்த்தை தவறிவிட்டாய், அட கண்ணம்மா பாங்கியும் வல்லையடி.

— பேயோன் (@ThePayon) July 31, 2014

என் வாசகரான பாரதியார் ரசிகர் ஒருவர் கொட்டடி வைத்திருக்கிறார். அதன் வாசலில் “ஜெயபேரிகை கொட்டடி” என்று போர்டு மாட்டியிருக்கிறார்.

— பேயோன் (@ThePayon) December 19, 2014

பாரதியார் இன்று உயிரோடு இருந்திருந்தால் ‘நெஞ்சு பொறுக்குதிலையே’வை லூப்பில் போட்டுவிட்டு ஐரோப்பா மாதிரி எங்காவது போயிருப்பார்.

— பேயோன் (@ThePayon) May 5, 2015

“ஓடி விளையாடு பாப்பா…” பாரதி குழந்தைகளுக்கான நல்ல அறிவுரைகளை அந்த காலத்திலேயே சொல்லிவிட்டுப் போய்விட்டார் நம்மையெல்லாம் விட்டுவிட்டு. :-(

— பேயோன் (@ThePayon) September 15, 2014

(பாரதியார் குரலில்) ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று…!!

— பேயோன் (@ThePayon) August 15, 2014

பாரதியா(ள)ர்.

— பேயோன் (@ThePayon) August 21, 2014

கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இருப்பதாக நான் என்றைக்குமே கருதியது கிடையாது. – பாரதியார்

— பேயோன் (@ThePayon) August 8, 2014

பாருக்குள்ளே நல்ல மாடு, எங்கள் பாரத மாடு. – உமா பாரதியார்

— பேயோன் (@ThePayon) May 7, 2015

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” – பாரதியார். காக்கைக் குருவி நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?

— பேயோன் (@ThePayon) May 5, 2015

“கங்கை நதிப்புறத்து கோதுமைப் பஞ்சம்” என பாரதி பாடுகிறார் (“காவிரி வெற்றிலைக்கு மாறிக்குவோம்” என்ற வரிக்கு முன்பு). இது எப்போது? தரவு உண்டா?

— பேயோன் (@ThePayon) July 25, 2015

புதியதோர் உலகம் செய்வோம் / கெட்ட போரிடம் உலகத்தை வேரொடு சேர்ப்போம். #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) November 9, 2015

நற்செய்தி: பாரதி எழுதிய ‘கண்ணம்மா என் காரியதரிசி’ கவிதை மீட்கப்பட்டுள்ளது.

— பேயோன் (@ThePayon) April 13, 2016

தீர்த்த கரையினிலே குட்டி மூலையில் செண்பகத் தோட்டத்திலே, கமான் கிளாப்ஸ்… காதல் துரோகத்தைச் சொல்லி மனதைக் கரைக்க பாரதி போல் ஒருவன் இல்லை.

— பேயோன் (@ThePayon) July 31, 2014

எங்கும் சுதந்திரம் என்பதே போச்சு. #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) March 29, 2015

“தைரியம்னா என்ன தெரியுமா? பயப்படாத மாதிரி நடிக்கிறது” – கமல்சார். “பயமெனும் பேய் தனை ஒளிப்போம்” – பாரதியார்.

— பேயோன் (@ThePayon) December 24, 2014

தமிழ் சினிமா சேட்டுகளின் ‘வர்றான் இல்லே’, ‘போறான் இல்லே’ பாணியில் பாரதியார்கூட எழுதியிருக்கிறார்: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’.

— பேயோன் (@ThePayon) July 9, 2014

பாரதியை மரியாதையுடன் பாரதியார் என அழைப்பது போல நாலடியை நாலடியார் என அழைக்கிறார்கள். பாரதியைவிட நாலடி சற்று மூத்தவர்.

— பேயோன் (@ThePayon) December 11, 2009

ஜாதிகள் இல்லையடி பா(ர்)ப்பா(ன்). #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) December 4, 2012

“அமுதூற்றினை ஒத்த இதழ்களும்” – இந்தப் பிரச்சினைக்கு hypersalivation என்று பெயராம். #மருத்துவபாரதி

— பேயோன் (@ThePayon) November 14, 2012

எல்லோரும் இந்நாட்டு மன்னர். நாம் எல்லோரும் இந்நாட்டு தூரத்து மன்னர். தத்தரிகிட தகதிரிகிட ததிங்கிணதோம். #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) October 11, 2011

நல்ல வீணை செய்து அது கெடும்படி புழுதியில் எறியும் வழக்கம் நம்மிடையே உள்ளதா என பாரதி கேட்கிறார். நாம் அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம்?

— பேயோன் (@ThePayon) June 24, 2012

தர்மத்தின் வாயதனை சூது பொத்தும். தர்மம் மறுபடி வையும். #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) July 16, 2012

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடி வெல்லும். மறுபடியும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்.

— பேயோன் (@ThePayon) June 7, 2012

பிறந்தநாள் வாழ்த்துப் பெற பாரதி உயிரோடு இல்லையே…! அஞ்சலிகள்…

— பேயோன் (@ThePayon) December 11, 2013

ஓவியர் ரவிவர்மா வரைந்த கடைசி ஓவியம் வேறு வழியின்றி பாரதியாரின் உருவப்படம்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? pic.twitter.com/SdHbUT0ToF

— பேயோன் (@ThePayon) December 10, 2013

‘சுந்தரத் தெலுங்கு’ என்று பாரதியார் சொன்னார்தான். ஆனால் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்றும் அவர்தான் சொன்னார்!

— பேயோன் (@ThePayon) June 7, 2013

“எந்தன் மூச்சை நிறுத்திவிடு” கொஞ்சம் அதிகப்படியான தண்டனையாகத் தெரிகிறது. “எந்தன் மீசை எடுத்துவிடு” நியாயமாகப் படுகிறது. #மீள்பாரதி

— பேயோன் (@ThePayon) June 1, 2013

சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் பாரதி. பெண்கள் ஆதிக்க சாதியாக இருப்பது அவர் கண்ணுக்கு உறுத்தவில்லை போலும்.

— பேயோன் (@ThePayon) February 14, 2010

சற்று நீண்ட படைப்புகள்

நானும் பாரதியும் (கட்டுரை)

பாரதியின் சந்தானமும் சந்தானத்தின் பாரதியும் (கட்டுரை)

சமீபத்தில் சாகாதவர் (கட்டுரை)

ரோட்டில் குறுக்கே வருபவனைக் கடிந்து கொளல் (கட்டுரை)

ஆறு சிம்பொனிகள் (கட்டுரையில் பகுதி 1)

பொய் இனிது (கட்டுரை)

டீக்குள் விரலை வைத்தால் (குறும்பதிவு)

துயிலாத கண் (கவிதை)

மனித நீர்த்துளி (கவிதை)

வீணையடி நீயெனக்கு (கவிதை)

தேடிச் சோறு (கவிதை)

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar