வாழ்க்கைத் தாய்

in கவிதை

வாழ்க்கை நமக்கு மட்டும் தாய்
என்று நமக்கொரு நினைப்பு
வாழ்க்கை எல்லோருக்கும் தாய்
அது ஒருவருக்கும் உடையதல்ல
வாழ்க்கைத் தாய் ஒரு பெரும் விருட்சம்
நம் எல்லோரையும் அதுவே பிரசவித்தது
மென்மையும் மெத்தையும்
கரடும் முரடுமான அதன் மடியில்
கட்டாத வெங்காய மூட்டையை உலுக்குவது போல்
நம்மைக் கொஞ்சித் தள்ளுகிறது அத்தாய்
அதன் பிடி தவறி விருட்சத்தின்
காலடியை அடைகையில்
சருகாவோம் நாம்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar