குரு உத்சவம்

in புனைவு

(குறுங்கதை)

கி.மு. காலம், சரஸ்வதி நதிக்கரையோரம். அங்கே ஒரு வனத்தில் ஒரு திவ்ய மரத்தடியில் வேத பாடசாலை ஓடிக்கொண்டிருந்தது.

அடையாளம் தெரியாத ஒரு முனிபுங்கவர் புலித்தோலை தமதடியில் வைத்து அதில் வீற்றிருந்தார். அவரிடமிருந்து பயங்கர தேஜஸ் வெளிக்கிளம்பிக்கொண்டிருந்தது.

குருசாஸ்தா ஒரு கரத்தைத் தமது தண்டத்தின் மேல் வைத்துக்கொண்டும் இன்னொரு கரத்தால் கமண்டலத்தை உருட்டிக்கொண்டும் தம் முன் இருந்த வித்யார்த்திகளுக்கு ஏதோ மந்திர சங்கதியை விளக்கிக்கொண்டிருந்தார். ரோமங்காணாத சிரசாளிகளான அந்தப் பிள்ளைகள் பவ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு சுற்று விளக்கி முடித்த குரு, ஒரு வித்யார்த்தியை நோக்கி, “இந்தாப்பா, நீ சொல்லு” என்றார்.

அந்த வித்யார்த்தி மந்திரத்தை ஒப்பித்தான்:

“ஒம்… சகனா பவது, சகனவ் புனஸ்து
சகவீர்யம் கரவாவகை….
கண்ணுக்குள் நூறு நிலவோ -”

குருமூர்த்தி குறுக்கிட்டார்: “நிலவோ கிடையாது, “நிலவா”.”

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar