சொற்களின் ஆற்றல்

in துண்டிலக்கியம்

சொற்களின் சிக்கனமான விவரிப்பு ஆற்றல் சில சமயம் காட்சிகளுக்கு இருப்பதில்லை. வானவில்லைக் குறிப்பிட வானவில் என்ற ஒற்றைச் சொல்லே போதும். அதைத் திரைப்படத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்றால் அசப்பில் வானவில் மாதிரியே இருக்கும் ஒரு ஆளைப் பிடிக்க வேண்டும், பிறகு அவருக்கு வானவில் போல் நடிக்கப் பயிற்சி தர வேண்டும். அடுத்து நிறைய பணத்தைக் கொட்டி ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்து அவர் வானத்தில் இருப்பதாகக் காட்ட வேண்டும். எழுதுபவர்களின் பாடு தேவலை.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar