அன்னம்மாள் அறக்கட்டளை இலக்கிய விருது

in துண்டிலக்கியம்

நானும் லபக்குதாசும் அவர் வீட்டருகே டீ குடித்துக்கொண்டிருந்தபோது பின்னவர் அந்தச் செய்தியைப் போட்டுடைத்தார்.

“அன்னம்மாள் அறக்கட்டளை இலக்கிய விருது கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார் லபக்குதாஸ்.

“இல்லியே.”

“எனக்குக் கெடச்சிருக்கு.”

“வாழ்த்துக்கள்.”

“பரிசுத் தொகை அம்பதாயர்ருவா!”

“ஹலோ, அம்பதாயிரமா?! கொஞ்சம் குறைச்சி சொல்லுங்க!” என்றேன் பதறி.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar