ஆட்டோக்காரர்களின் அராஜகம்

in துண்டிலக்கியம்

ஆட்டோக்காரர்களுக்கு ஏன் தெரியுமா இவ்வளவு கெட்ட பெயர் வருகிறது? சொல்கிறேன்.

என் தெருவில் நடந்து போகிற வழியில் ஓர் ஆட்டோவைப் பார்த்தேன். அதனுள் இருந்த ஆட்டோக்கார இளைஞனிடம் “என்னப்பா, வெயிட்டிங்கா?” என்றேன். நன்றாகச் சாய்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தவன் திடுமென சுதாரித்து நிமிர்ந்து உட்கார்ந்து, “இல்ல சார், போலாம் சார்” என்றான்.

“இல்லப்பா, ஒரு அக்கறைல கேட்டேன்” என்கிறேன், பார்வையாலேயே என்னைக் கிள்ளிவிடுவது போல் முறைக்கிறான்!

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar