தனியாக இருக்கும் ஆண்பிள்ளை

in துண்டிலக்கியம்

கடைத்தெருவுக்குப் போய்விட்டு வந்த மனையாளரிடம் சொன்னேன்: “ரொம்ப நாள் கழிச்சி எங்க சித்தப்பாவுக்கு ஃபோன் பண்ணிப் பேசினேன். நல்லா பேசுனாப்ல.”

“அதெப்பிடி நான் இல்லாத நேரமா பாத்து உங்க சொந்தக்காரங்களோட பேசுறீங்க? அவ்ளோ ரகஸ்ஸ்ஸியமா என்ன பேசுறீங்க?” – மனைவிக் கேள்வி.

எனக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது. “ஒருத்தருக்கு ஃபோன் பண்றப்ப நீ இருக்கியா இல்லியான்னு பாத்துக்கிட்ருக்க முடியாது. பண்றோம், பேசுறோம், அவ்ளதான்” என்று உள்ளுக்குள் பொரிந்தவன்,

“அதேதான், அதேதான் எனக்கும் தோணிச்சு. ‘என்னடா இது, நீ இல்லாதப்ப ஃபோன் பண்றமே, தப்பில்லையா’ன்னு டயல் பண்ணப்புறம்தான் சொரேர்னு உறைச்சிது. ஆனா ஃபோனை கட் பண்றதுக்குள்ள அவரு எடுத்து பேசவே ஆரம்பிச்சிட்டாரு வீட்ல தனியா இருக்குற ஆம்பள கிட்ட வெவஸ்த கெட்ட மனுசன்!” என்றேன்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar