நன்கொடை அளியுங்கள்

in துண்டிலக்கியம்

உங்கள் ‘இமேஜை’க் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நான்கு தர்ம ஸ்தாபனங்களுக்கு நன்கொடை அளித்துவிட்டு ஆதாரத்தை ஃபேஸ்புக்கில் போட்டு நல்ல பெயர் சம்பாதித்துக்கொள்ளுங்கள், யார் வேண்டாம் என்கிறார்கள்.  அதை விட்டுவிட்டு கிரேக்க சினிமாவையும் பிரெஞ்சு சினிமாவையும் எதற்கு இழுக்கிறீர்கள்? அதற்காகவா அவர்கள் படம் எடுக்கிறார்கள்? பிரெஞ்சுப் படங்களைப் பற்றிய உங்கள் அரைகுறைப் புரிதலை அரைகுறைத் தமிழில் எழுதிவிட்டு அறிவுஜீவியாகக் காட்ட முயல்வது ஏன்? போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கு என்ன தண்டனை தெரியுமா?

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar