மோப்பக் குழையும் அநிச்சை

in துண்டிலக்கியம்

“30ஆம் தேதி எங்க மாமா வர்றாரு. ரெண்டு நாள் (மூன்று நாட்கள்) தங்கிட்டுப் போவாரு” என்றது இடி.

வழக்கம் போல் திடுக்கிட்ட நான், “அந்த டைம்ல நான் வாஷிங்டன்ல இருப்பேன்” என்றேன் அநிச்சையாக.

“எங்க வேணா இருந்துக்குங்க. சும்மா உங்களுக்குத் தகவல் சொன்னேன்.”

அந்தத் தேதியில் நான் வடபழனியைத் தாண்டி எங்கும் போகப்போவதில்லை என்றாலும் அப்படிச் சொன்னதில் நெஞ்சு நிமிர்ந்த உணர்வு.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar