அதிர்ச்சியும் ஆறுதலும்

in துண்டிலக்கியம்

சிறுகதை யோசனை: நாயகர் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு அதற்குப் பின்பு மருத்துவர்களின் எச்சரிக்கையின்பேரில் கட்டுப்பாடாக இருந்து ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறார். ஒருநாள் மனைவி-குழந்தைகள் மட்டும் ஒரு வாரப் பயணமாக வெளியூர் செல்லத் திட்டமிடுகிறார்கள். நாயகர் உற்சாகமடைந்து விடுமுறை தினக் கொண்டாட்டங்களுக்குத் தடபுடலாக ஏற்பாடு செய்கிறார். தவிர்க்கவியலாத காரணங்களால் மனைவியின் பயணம் ரத்தாகிறது. அதிர்ச்சியில் நாயகருக்கு மூன்றாம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் விளைகிறது. தான் மட்டும் பயணத்தை ரத்து செய்யாதிருந்தால் கணவர் தனிமையில் சாக வேண்டிவந்திருக்குமே என்று மனைவி ஆறுதலடைவதோடு கதை முடிகிறது.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar