கண்காணாத பாராட்டு

in துண்டிலக்கியம்

எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே குறிப்பிடத்தக்கது சொற்களால் அல்லாமல் பார்வையால் அளிக்கப்பட்டது.

ஒரு கல்லூரி விழாவுக்கு விருந்தினராக உரையாற்றச் சென்றிருந்த நான், அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் எனது ‘பாம்புத் தைலம்’ புத்தகத்தைக் கொடுத்தேன். பேசுவதற்குத் தன் முறை வரக் காத்திருந்த நேரத்தில் முழுப் புத்தகத்தையும் படித்துவிட்டார் பேரா.

படித்த பின் புத்தகத்தைத் திரும்பத் தந்தபோது என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘உன்னைப் பார்த்தால் இவ்வளவு அறிவு இருப்பவன் போல் தெரியவில்லையே?’ என்றது அந்தப் பார்வை.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar