இன்சூரன்ஸ்

in துண்டிலக்கியம்

ரத்தக் கொழுப்பு மருந்துகளின் முதன்மை நோக்கம், நம்மை சீக்கான வயதாளிகளாக உணரவைப்பது. அவற்றை நிறுத்துவதுதான் ஆரோக்கியமாக உணர்வதன் முதல் படி.

பழக்கதோஷிணியிடம் இத்தகவலைப் பகிர்ந்து, “நிறுத்துனா பெருசா என்ன ஆயிடப்போவுது? உயிர் போனாலும் இன்சூரன்ஸ் இருக்கில்ல!” என்கிறேன் வேடிக்கையாக.

“நாலு லட்சத்த வச்சிட்டு என்னத்தப் பண்றது?” என்கிறார் அவர்.

“நான் வேணா கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாக்கவா?” என்கிறேன். பதிலையே காணோம்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar