மனமாற்றம்

in நாடகம், புனைவு

(குறுநாடகம்)

கதாபாத்திரங்கள்

ஆசிரியர், நடுத்தர வயது – 1

மாணவர்கள் – 33

இடம்: மாநில வாரியப் பள்ளி ஒன்றின் பதினோராம் வகுப்புக்கான வகுப்பறை.
தேதி: ???

(தமிழ் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர் கையில் தமிழ்ப் பாடநூலை சன்னக் குரலில் உரக்கப் படிக்கிறார். மாணவர்கள் தத்தம் கைகளில் உள்ள பாடநூலைப் பார்க்கிறார்கள். ஒரு மாணவன் மட்டும் ஜன்னலுக்கு வெளியே விளையாட்டு மைதானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.)

ஆசிரியர்: (புத்தகத்தைப் பார்த்து) மனமாற்றம். இது எளிதில் நிகழ்வதல்ல. ஒரு நிலையில் உள்ள மனம், வேறொரு நிலைக்கு மாறுவதென்றால் –

(ஆசிரியர் வேடிக்கை பார்க்கும் மாணவனைக் கவனித்து முகம் சுளிக்கிறார்.)

ஆசிரியர்: (மாணவனிடம் உரக்க) கோபியர் கொஞ்சும் ரமணா!

(மாணவன் ஆசிரியர் குரல் காதில் விழாமல் வேடிக்கையில் லயித்திருக்கிறான்.)

ஆசிரியர்: (இன்னும் உரக்க) கோபாலகிருஷ்ணா!

(மாணவன் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்கிறான். ஆசிரியர் தொடர்கிறார்.)

ஆசிரியர்: ஒரு நிலையில் உள்ள மனம்…

-திரை-

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar