பார்த்தல்

in துண்டிலக்கியம்

சமீபகாலம் வரை இளைஞர்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கும். நமக்குப் பதிலாக இவர்கள் வாழ்கிறார்களே என்று உறுத்தும். அதுவும் கைக்குழந்தைகள் என்று வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மனசு கிடந்து அடித்துக்கொள்ளும். நாம் குழந்தையாகப் பிறக்காமல் போய்விட்டோமே என்று பதறும்.

இப்போது தெளிவு பிறந்துவிட்டது. வாழ்க்கையில் இவர்கள் இன்னும் நிறைய பார்க்க வேண்டியிருக்கிறது. நான் எல்லாம் பார்த்தாயிற்று. இன்னும் கொஞ்சம் பார்த்தால் போதும். இப்போதெல்லாம் இவர்களைப் பார்க்கும்போது வீட்டுப்பாடம் செய்யாமல் பிரம்படி வாங்கும் மாணவர்களை வீட்டுப்பாடம் செய்தவன் போல் பார்த்துப் பூரிக்கிறேன். “நடத்து, நடத்து” என்று மனசுக்குள் அவர்களை இளக்காரமாய்ச் சீண்டுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar