மனைவிகளைப் பற்றிய நகைச்சுவை

in துண்டிலக்கியம்

ஆண்கள் உருவாக்கும் வெகுஜன நகைச்சுவையில் மனைவிகள் எப்போதுமே சர்வாதிகாரிகளாக, நியாயமற்றவர்களாக, கோபக்காரர்களாக, நகை-புடவை ஆசைக்காரர்களாக, மோசமாகச் சமைப்பவர்களாக, இன்னும் பலவாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். கணவர்களோ, மனைவிகள் என்னும் பிசாசுகளிடம் சிக்கி அல்லலுறும் பலவீனர்களாகக் காட்டப்படுகிறார்கள். எல்லா சித்தரிப்புகளும் ஆற்றாமையில் விளைபவை என்றாலும் எனக்கு இந்த சர்வாதிகாரம் என்ற விசயம் மட்டும் ஓர் அவதானிப்பைத் தருகிறது.

மனைவிகளின் அதிகாரப் போக்கு நகைச்சுவைக்குரிய விசயமாவதற்குக் காரணம், அவர்கள் கையில் உள்ள அதிகாரம் நியாயப்படி தங்கள் கையில் இருக்க வேண்டும் என்றும் சர்வாதிகாரிகளாக இருக்க வேண்டியது தாங்கள்தாம் என்றும் கணவர்கள் நினைப்பதுதான். அது நடக்காமல் போவது மட்டுமின்றி நேரெதிர் நிலையும் நிலவும்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்ட மனைவி எதிர்ப்பு நகைச்சுவை உதவுகிறது. ஊடகங்கள் கணவர்கள் கையில் இருப்பதால் அவர்களுக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அதே சமயத்தில், கணவர்களிடம் பல வகை வன்முறைகளுக்கு ஆளாகும் மனைவிகளின் கையில் ஊடகங்கள் இருந்தால் மனைவிகளின் நகைச்சுவை எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவல்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar