தீர்வுகள்

in துண்டிலக்கியம்

நேற்றிரவு குடும்பப் பிரச்சினைகளையும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றி சிந்தித்துச் சிந்தித்து நேரம் ஓடிவிட்டதால் சாப்பிட நள்ளிரவானது. எந்த ஜென்மத்திலும் சாத்தியமற்றவையாகத் தெரிந்த தீர்வுகளைப் பற்றி யோசித்துக்கொண்டே சாப்பிட உட்கார்ந்தேன். சோற்றைப் பிசைகையில், சாப்பிடுவதுகூட வியர்த்தமான காரியமாகப் பட்டது. அப்போது எனக்குத் தோன்றியது: இப்போதும் எதுவும் கெட்டுப்போய்விடவில்லை, குழம்பும் ரசமும் ஆறித்தான் போயிருக்கின்றன; குப்பையில் கொட்டத் தேவையில்லை. வேகமாக உருட்டி உருட்டி விழுங்கிவிடலாம்…

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar