இப்போது கேட்பது…

in துண்டிலக்கியம்

“மாஞ்சோலைக் கிளிதானோ?
மான்தானோ?
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ?
இவள் ஆவாரம்பூதானோ, நடை தேர்தானோ?
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?”

மனசுக்குள் இவ்வளவு சந்தேகங்களை வைத்துக்கொண்டு எதற்கொருவன் காதலிக்க வேண்டும்? நாளைக்கே கல்யாணம் காட்சி ஒன்று ஆகிவிட்டுக் கருத்து வேறுபாடு வாக்குவாதம் வாய்ச்சண்டை என வந்துவிட்டால் அத்தனை சந்தேகங்களும் வசவுகளாக மாறிவிடும்.

“நீ மாஞ்சோலைக் கிளி என்று சொல்லாமலே உன்னை என் தலையில் கட்டிவிட்டார்கள்”, “எங்கள் குடும்பமே ஆவாரம்பூதான், நடை தேர்தான். இது தெரியாமல் தாலியைக் கட்டியபோது எங்கே போச்சு உன் புத்தி?” என்றெல்லாம் வளரும். #Nowlistening

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar