குளோனிங்

in கவிதை

நீ வேண்டுமெனக்கு
மூன்று நகல்களாய்

தோழியாய் ஒருத்தி
காதலியாய் ஒருத்தி
மனைவியாய் ஒருத்தி

மட்டுமல்ல

ஆடிட்டராய் ஒருத்தி
துணி துவைக்க ஒருத்தி
சமைக்க ஒருத்தி
பரிமாற ஒருத்தி

நான்குக்கு நான்கு ஆள்
கேட்கிறதா என்கிறாய்

உணர்வுகளைப் போல்
மென்மையானவளே,
பூக்களைச் சுமந்து
காற்றில் பறக்கும்
கூந்தல் போர்த்திய
உன் தலையில்
அவ்வளவையும் கட்டும்
கொடுரத் தோழன், காதலன், மனைவன்
அல்ல நான்.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar