தோற்ற மயக்கம்

in துண்டிலக்கியம்

நீண்டகாலமாகத் தேடிவந்த ஒரு பிரெஞ்சு படம் ஒருவழியாக இணையத்தில் கிடைத்தது. ஆனால் சுமாரான பிரின்ட். அதைச் சிறிய திரையில்தான் பார்க்க முடியும். திரைமொழி பிரின்ட் தரத்தைக் கடந்த விசயம் என்று நினைத்துக்கொண்டு தரவிறக்கினேன். எனது ஐந்து அங்குல செல்பேசித் திரையில் பார்க்கும்போது திரை என் முகத்தைப் பிரதிபலித்தது. அப்புறம் படத்தை எங்கே பார்ப்பது? ஆனால் இரண்டு மணிநேரம் பொழுது போனதே தெரியவில்லை.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar