அன்புக்கு அடிமை

in துண்டிலக்கியம்

சாதாரண நாட்களில் பலவீனமானதொரு கணத்தில் “உங்களுக்கு என் மேல் நிறைய அன்பு இருக்கிறதா?” என்று மனைவி கேட்பார். வெறும் ‘அன்பு இருக்கிறதா’ அல்ல; ‘நிறைய’ இருக்கிறதா. 17 வருசப் பழக்கம் இருக்கும்போது அன்பை வீணடிப்பானேன்? இதைச் சொன்னால் எடுபடாது. எனக்கோ நேரடியாகப் பொய் சொல்ல மனம்/தைரியம் வராது. எனவே ‘உங்களுக்கு த்ரிஷா பிடிக்குமா?’ என்று மனைவி கேட்டதாகக் கற்பனை செய்துகொள்வேன். “ஐயையோ, கண்டிப்பாக!” என்பேன் உணர்ச்சிவசப்பட்டு. அவருக்கும் த்ரிஷா பிடிக்கும்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar