தர்மத்தின் வாழ்வு

in துண்டிலக்கியம்

மனித நாகரிகம் தோன்றியது முதல் இன்று வரை உலகெங்கும் நிகழ்ந்த படுகொலைகள், ஒடுக்குமுறைகள், இதர வன்முறைகள் மற்றும் பெரும் அநீதிகள், பெரும் பஞ்சங்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவற்றின் பல்லாயிரமாண்டுக் கால வரலாற்றைச் சுருக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். 20,000 பக்கம் வரும் போல் இருக்கிறது. புத்தகத்திற்கு ‘எல்லாம் அவன் செயல்’ என்று தலைப்பு வைத்தேன். ரொம்பக் குரூரமான தலைப்பாக இருப்பதாகப் பதிப்பாளர் அதை மாற்றச் சொன்னார். ‘கந்தன் கருணை’ என்று மாற்றினேன். அதுவும் நிராகரிக்கப்பட, கடைசியில் ‘உலகம் இவ்வளவுதான்’ என்பதில் வந்து நிற்கிறது.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar