மலர்ப்பாதை

in கவிதை

சில்லிடும் மார்கழிக் காற்றோடு
மேகமாய் வந்து தழுவும் பூ வாசம்
தார்ச்சாலையில்
வேய்ந்த மலர்ப்பாதை
செல்லும் இடமெல்லாம் நீ
பூக்களைத் தூவிச் செல்கிறாய்
சவ ஊர்தியிலிருந்து.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar