நிலப்பரப்பு

in கவிதை

ஃப்ளோபேரும் ஸ்டெந்தாலும்
மோனேயும் ரெனுவாரும்
மாக்கேயும் ம்யூந்தரும்
காண்டின்ஸ்கியும் கிர்ஹ்னரும்
தெரேனும் பிரெஞ்சுப்
புதிய அலையினரும்
இதர ஐரோப்பியரும் சித்தரித்த
ஆவியடக்கும்
கனவு நிலப்பரப்பை
இங்கிருந்து சென்றடைய
ஆட்டோ எவ்வளவு கேட்பான்?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar