நேற்று

in துண்டிலக்கியம்

நேற்றுத் திருவல்லிக்கேணியில் ஒரு கூட்டத்தை முடித்துக்கொண்டு நானும் லபக்குதாசும் அதன் தெருக்களில் உலாத்திக்கொண்டிருந்தோம். ‘கோமாதாப்பட்டி’ அல்லது ‘ஜல்லிக்கேணி’ என்று பெயர் மாற்றத்தக்க அளவுக்கு எங்கு பார்த்தாலும் மாடுகள், மாடுகள், இன்னும் பல மாடுகள். கோவில்கள், கன்னடத்து ஆண்டி மடங்கள் என்று வெளியிலிருந்து பார்க்க நிறைய இருந்தது.

“என்னய்யா ஒரே ‘நாம’கரணமா இருக்கு?” என்றார் லபக்குதாஸ் ஒரு பூசாரிக் குழுமத்தைப் பார்த்துவிட்டு.

“அட, அத ஏன் கேக்கிறீங்க?” என்றேன்.

“நானும் தெரியாமத்தான் கேக்கிறேன்” என்றார்.

இப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மாடுகளினூடே.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar