அட!

in துண்டிலக்கியம்

என் பதின்ம வயதுகளில் நான் அழகாக இருப்பேன். என் தலைமுடி நன்றாகப் படியும். டிப்டாப்பாக ஆடை அணிவேன். சூரியன்கூட மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், நான் கழுத்து வரை சட்டைப் பொத்தான் போடத் தவறவே மாட்டேன். என் உறவினர் ஒருவர் – மூன்று குழந்தைகளையும் பெண்ணாகப் பெற்றுவிட்டவர் – ஒருநாள் என்னைப் பார்த்து அசந்துபோனார். ‘சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வேண்டிய ஆளப்பா நீ’ என்று சொல்ல வாயைத் திறந்தார். திறந்த வாய்க்குள் மின்னலாக ஓர் அம்பு பாய்ந்து ஆள் மரமாகச் சரிந்தார் – செவ்விந்தியர்கள்!

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar