சூரிய பகவான்

in துண்டிலக்கியம்

‘பால்வீதி’ எனப்படும் நமது சூரியக் குடும்பத்தில் ஒரே ஒரு சூரிய பகவான்தான் இருக்கிறார். மற்ற சூரியக் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய பகவான்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கின்றன. இரண்டு சூரியன்களைக் கொண்ட புறக்கோள்கள் (எக்சோப்ளானட்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரிய பகவானாகவும் மற்றது சூரிய பகவதியாகவும் இருக்கலாம். இவர்களை வழிபட ஆள் இருக்கிறார்களா அல்லது இவர்கள் அனாதைக் கடவுளர்களா என்பதை அறிவியல் நமக்கு இன்னும் கண்டறிந்து சொல்லவில்லை.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar