ரொம்ப முக்கியம்

in துண்டிலக்கியம்

நெருங்கிய உறவினர் தாய்வீட்டிலிருந்து கிளம்பும்போதே, ‘சத்தியமாக பத்திரமாய் வீடு போய்ச் சேருவேன். இது உன் மேல் ஆணை. இனி அடுத்த சந்திப்பு வரை நீ யாரோ, நான் யாரோ’ என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்து உறுதியளித்துவிட்டால் பிறகு இங்கு வந்து என் அருகில் நின்று தாயாரை ஃபோனில் அழைத்து எப்போது ரயில் வந்து சேர்ந்தது, ரயில் நிலையத்தில் எவ்வளவு கூட்டம், ஏயப்பா, ஆட்டோக்காரன் ஒவ்வொருத்தனும் எவ்வளவு கேட்கிறான் தெரியுமா, கடைசியாக ஏறிய ஆட்டோவின் காரன் மீட்டருக்கு மேல் எவ்வளவு கேட்டான், இறங்கும்போது எப்படித் தகராறு செய்தான், இவனை மாதிரி ஆட்களால் எப்படி ஒழுங்கான ஆட்டோக்காரர்களின் பெயரும் கெடுகிறது, வீட்டு வாசலில் பார்த்த லட்சுமணன் அம்மா என்ன பேசினார், லட்சுமணன் குடும்பத்தார் ஜூன் மாதம் எங்கு போகிறார்கள், அந்தப் பையனுக்கு விவரம் போதுமா முதலியவைகளை என் காதுபடப் பேசத் தேவையிருக்காது.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar