லஞ்சம்

in கட்டுரை

லபக்குதாசின் வீட்டுக்குச் செல்லுமுன் வழமை போல் அவரின் தெருமுனை டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவரும் வந்தார்.

மாஸ்டரிடம் “ஒரு டீ ஒண்ணு குடுங்க” என்று சொல்லிவிட்டு, “இடைநிலை-ல என் கதைக்கு எத்தன பாராட்டுக் கடிதங்கள் வந்திருக்கு தெரியுமா?” என்றார் என்னிடம்.

எனக்கு எரிச்சலாக வந்தது. புன்னகைத்தேன். என்னவோ இவருக்கு மட்டும்தான் பாராட்டுக் கடிதங்கள் வருகிற மாதிரி!

லபக்குதாஸ் கல்லாவை அணுகி ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைக்கப் போனார்.

நான் மாஸ்டரிடம் “இவருக்கு டீய நல்லா ஆத்திக் குடுத்துருங்க” என்று கிசுகிசுத்து லஞ்சமாக அவர் கையில் இரண்டு ரூபாயை அழுத்தினேன்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar